₹2,200 கோடியில் புதிய தோற்றம் பெறும் கோவை விமான நிலையம்!
கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் முக்கிய கட்டத்தை நோக்கி பணிகள் நகர்ந்து வருகின்றன.
சுமார் ₹2,200 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டத்தில், 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய விமான நிலைய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்தின் ஓடுபாதையை சுமார் 3,810 மீட்டர் வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுமையான திட்டப் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0
Leave a Reply